ரூ. 3,108 கோடியில் சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் விஜய்..! - Seithipunal
Seithipunal


சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் இன்று (அக். 14-ஆம் தேதி) அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 09 குடிநீர் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்படவுள்ளன.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட​பிரதான குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

நீர் பற்றாக்குறை அல்லது இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது. எனவே, தற்போதுள்ள குடிநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.3,108.55 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் விஜய் சோழிங்கநல்லூரில் இன்று சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay lays the foundation stone for the Chennai Ring Road project worth Rs 3108 crore


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->