அரசு நிகழ்ச்சிகளில் தொடரும் மின்தடை: காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!
Power Cut During Government Event Minister P Rajkumar Warns of Strict Action Against Culprits
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப. ராஜ்குமார் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில், ரூ.10.04 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்து அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சரின் உரையின்போது திடீர் மின்தடை
நிகழ்ச்சியில் அமைச்சர் ப. ராஜ்குமார் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒலிபெருக்கி வசதி இல்லாமல் அவர் சிறிது நேரம் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் மின்சாரம் வந்தவுடன் இவ்விவகாரம் குறித்துப் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளின்போது இதுபோன்று தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி வருவதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர் பா. ராஜ்குமார் எச்சரிக்கை
இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரசு விழாக்களில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைபடுவதற்குக் காரணமானவர்களை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலேயே இதுபோன்ற மின்தடைகள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Power Cut During Government Event Minister P Rajkumar Warns of Strict Action Against Culprits