மம்தா பானர்ஜியை கத்தியால் தாக்க முயன்றதாக புகார்; ஆதாரமோ அல்லது உண்மையோ இல்லை; மே.வங்க காவல்துறை அறிவிப்பு..!
West Bengal Police announce there is no evidence to support the allegation that an attempt was made to attack Mamata with a knife
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் ஆதாரமற்றது என கொல்கத்தா நகர காவல்துறை அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (அக். 13) மாலை மம்தா பானர்ஜி காளிகாட்டில் உள்ள தனது வீட்டின் அருகில் துர்கா பூஜை விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் மம்தாவை பார்த்து, தகாத வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு, போதையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக மம்தாவை நோக்கி நெருங்க முயன்றார். ஆனால், அந்தப் பெண் மமதாவின் உறவினர் என்றும், அவா் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்பட்ட புகார் குறித்து எந்தவொரு ஆதாரமோ அல்லது உண்மையோ இல்லை என கொல்கத்தா காவல்துறை ஆணையர் அஜய் குமார் நந்த் இன்று தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், எந்தவொரு ஆதாரமோ அல்லது உண்மையோ இல்லை என்று அஜய் குமார் நந்த் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
West Bengal Police announce there is no evidence to support the allegation that an attempt was made to attack Mamata with a knife