போர் பதற்றம் மத்தியில் புதிய அதிர்ச்சி...! ஒரே நேரத்தில் ஜப்பானை நோக்கி 10 ஏவுகணைகள் ஏவிய வடகொரியா...! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல், உக்ரைன் மற்றும் ரஷியா போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் ஏற்கனவே பதற்றமான சூழலில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த முறை, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியா தெரிவித்த தகவலின்படி, வடகொரியாவின் சுனான் பகுதியிலிருந்து மதியம் சுமார் 1.20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.

ஒரே நேரத்தில் இத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது, வழக்கமான சோதனைகளை விட பெரிய ராணுவ நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சென்றதாகவும், அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நிலைமையை மதிப்பீடு செய்யவும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவசரக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே வடகொரியா இந்த ஏவுகணை நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சிகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரியா முன்பே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் வடகொரியா கடுமையாக கண்டித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Shock Amidst War Tensions North Korea Launches 10 Missiles Toward Japan Simultaneously


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->