'நூறு சாமி' மூலம் மீண்டும் இணைந்த 'பிச்சைக்காரன்' கூட்டணி; படத்தின் புதிய அப்டேட் வெளியீடு..!
Vijay Antony and Sasi Reunite for the Film Nooru Saami
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் + கதாநாயகனாக கலக்குபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, பெரியளவில் வசூலையும் வாரி குவித்தது.
விஜய் ஆண்டனி ;பிச்சைக்காரன்; படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் இயக்குநர் சசியுடன் இணையவில்லை.
இந்நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் புது படம் ஒன்றின் மூலம் இணைந்துள்ளார். இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
English Summary
Vijay Antony and Sasi Reunite for the Film Nooru Saami