07 ஆண்டுகள் சிறை, அபாரதத்துடன் கூடிய கடும் விதிகள்; மஹாராஷ்டிராவில் மத மாற்ற தடை மசோதா தாக்கல்..! - Seithipunal
Seithipunal


'மகாராஷ்டிர மத சுதந்திர மசோதா 2026' என்ற மசோதாவை அம்மாநில அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவின்படி,  திருமணம் என்ற பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 07 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அத்துடன், அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடபப்ட்டுள்ளது.

மேலும், மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும் எனவும், மதம் மாற விரும்புபவர்கள், அது குறித்து 60 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மதமாற்றத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தை, அந்தத் திருமணத்திற்கு முன்பு தாய் எந்த மதத்தைப் பின்பற்றினாரோ, அந்த மதத்தை சேர்ந்ததாகவே கருதப்படும் எனவும், ஒரு வேலை பெற்றோர் பிரிந்தால் குழந்தை தாயிடமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்த இந்தியாவின் 10 வது மாநிலமாக மகாராஷ்டிரா மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உபி, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதேவேளை, அரசியலமைப்பு வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை என்பது பொது ஒழுங்குக்கு உட்பட்டது என அந்த மசோதாவின் அறிமுக உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti Conversion Bill Tabled in Maharashtra


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->