துபாயில் ICU-வில் வென்டிலேட்டர் உதவியுடன் போராடும் தாய்; இந்தியா அழைத்துவர ரூ.50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்; கண்ணீரோடு உதவிகேட்கும் தமிழர்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டைச் சேர்ந்த திலக் குமார் மற்றும் அவரது மனைவி ஷாமினி ரமேஷ் ஆகியோர் கடந்த 08 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகின்றனர்.

மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக பார்ப்பதற்காக திலக் குமாரின் தாயார், சமீபத்தில் துபாய் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவர் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால், கடந்த 40 நாட்களாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 03 லட்சம் ரூபாய் மருத்துவக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை மொத்தப் மருத்துவ கட்டணம் 1.25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

அத்துடன், இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, செலவைக் குறைக்கத் தாயாரை இந்தியாவிற்கு அழைத்து வரத் திலக் குமார் திட்டமிட்டார்.

இதனையடுத்து, மார்ச் 04-ஆம் தேதி 07 லட்சம் ரூபாய் செலவில் வணிக ரீதியான மருத்துவ விமானத்தில் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே ஒரே வழி. போர் பதற்றத்தால் அதன் கட்டணம் 07 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் திலக் குமாரால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை.

இந்த சூழலில், "நேரம் கடந்து கொண்டே செல்கிறது, ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று அவரும் எனது தாயை காப்பாற்றத் உதவ வேண்டும்" என்று திலக்குமார் NDTV வாயிலாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air Ambulance Demands rs50 Lakhs to Repatriate Mother Battling on a Ventilator in a Dubai ICU


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->