மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷாவின் 02 நாள் தமிழ்நாடு, புதுவை பயணம் ரத்து..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (25-ஆம் தேதி) காலை 11.20 மணியளவில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தனி விமானம் மூலமாக சென்னை வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. 

சென்னையில், இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்வதாகவும் இருந்தது. அதன்பின்னர் 26-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்து, மீண்டும் தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலகி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 20-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.  அப்போது, சிஜேபி இயக்கத்தினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது தடையை மீறியும், அனுமதி இல்லாமல் பேரணி சென்றதால் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் வன்முறை வெடித்தது.

காவல்துறை கூட்டத்தை கலைக்க தடியடி தாக்குதல் நடத்தியத்தோடு, கண்ணீர்ப்புகை போட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை மீதும் தாக்குதல் நடத்திய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், கடந்த 04 நாட்களாக சிஜேபி காரர்களின் தொடர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 02 நாள் அரசுமுறை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Home Minister Amit Shahs 2 day visit to Tamil Nadu and Puducherry cancelled


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->