'கேஜிஎஃப்' அத்தியாயம் 1 இல் ஆனந்த் இங்கலகியாக கலக்கிய அனந்த் நாக்-க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு; பிரதமர் மோடி வாழ்த்து..!!
Prime Minister Modi congratulates Anant Nag who acted in KGF on the announcement of the Dadasaheb Phalke Award
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் (Rocky Bhai) நடிப்பில் வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த 'கேஜிஎஃப்' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற நடிகர்களில் ஒருவர் கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு 2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 270 திரைப்படங்களுக்கும் மேல்அனந்த் நாக் நடித்துள்ளார். கன்னட திரையுலகிலிருந்து வெளியாகி பான் இந்தியா அளவில் மாபெரும் ஹிட்டான 'கேஜிஎஃப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரையுலகில் அறிமுகமாகி 53 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள அனந்த் நாக் கன்னட சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில், இந்திய திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2024-ஆம் ஆண்டுக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது அவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருது விழாவில் அனந்த் நாக்-க்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்படவுள்ளது.
அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தாதா சாகேப் பால்கே விருது பெரும் புகழ்பெற்ற கலைஞர் அனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள். தனது இயல்பான நடிப்பால் கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல், இந்திய திரையுலகில் முத்திரை பதித்தவர். அவருக்கு இது தகுதியான கௌரவம்.'' என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi congratulates Anant Nag who acted in KGF on the announcement of the Dadasaheb Phalke Award