''திருமணமான ஆண்களைத் துரத்தும் பெண்கள் மிகவும் தீயவர்கள் ; அவர்கள் பிற பெண்களுக்கு எதிரானவர்கள்''; இணையத்தில் நடிகை தனிஷா முகர்ஜியின் பதிவுக்கு கடும் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் நட்சத்திர நடிகையான கஜோலின் தங்கையும், பல்வேறு இந்தி படங்களில் நடித்தவருமான தனிஷா முகர்ஜி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து வருபவர். 

இந்நிலையில், திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குறித்து தனிஷா முகர்ஜி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளமை  பாலிவுட்டில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.  

அந்த பதிவில், ''திருமணமான ஆண்களுடன் தவறான உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள், பெண் உரிமைவாதிகள் கிடையாது. உண்மையில் அவர்கள் பிற பெண்களுக்கு எதிரானவர்கள். ஒருவரின் கணவருடன் பழகும்போது, அவருடைய மனைவியை அவமதிக்கிறீர்கள். இதில் ஆண்களும் தவறு செய்கிறார்கள், அவர்களிடம் ஒழுக்கம் இல்லை. ஆனால், தெரிந்தே திருமணமான ஆண்களைத் துரத்தும் பெண்கள் மிகவும் தீயவர்கள். அத்தகைய பெண்கள் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.'' என்று மிகவும் காரசாமான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

நடிகை தனிஷா முகர்ஜியின் இந்தக் கருத்து வெளியான உடனே, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. அதாவது, தவறு செய்யும் ஆண்களை வெறும் ஒழுக்கக் கேடானவர்கள் என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, பெண்களை மட்டும் தீயவர்கள் என்று தனிஷா முகர்ஜி குற்றஞ்சாட்டுவது ஒருதலைப்பட்சமானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதேநேரம், சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் சிலர், அவரது உறவினரான நடிகை ராணி முகர்ஜி, ஏற்கனவே திருமணமான ஆதித்ய சோப்ராவை காதலித்து மணந்ததையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும் நேரடியாகச் சுட்டிக்காட்டி, தனிஷா முகர்ஜியின் கருத்துக்கு இணையத்தில் மிகக் காட்டமான பதில்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Tanishaa Mukerji faces severe criticism online for her post about women who pursue married men calling them very evil


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->