தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார் லெஜண்ட் சரவணன்...! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் அருள் சரவணன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன்பின்னர், துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் 'லீடர்'. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் துரை செந்தில்குமார் உடன் இணைந்து அடுத்த  படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் பயணித்து வரும் லெஜண்ட் சரவணன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்தில் கௌரவ உறுப்பினராக  சங்கத்தின் தலைவர் சேரன் முன்னிலையில் இணைந்துள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், திறமைசாலிகளையும் லெஜண்ட் சரவணன் நேரில் சந்தித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ நிகில் முருகன் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legend Saravanan has joined the South Indian Film Writers Association as an honorary member


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->