பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு; விளக்கமளித்துள்ள விஜய் தொலைக்காட்சி...! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 06 தேதி தொடங்கப்பட்ட 10 வது சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சனிக்கிழமை எபிசோட்டில்அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இந்த 'பிக் பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் தலைவரின் (Captain) பங்கு குறித்துப் பேசும்போது நடிகர் விஜய் சேதுபதி "தலைவர்" மற்றும் "தலைமைப் பண்பு" பற்றித் தெரிவித்தக் கருத்துகள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக தமிழகத்தின் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் அதற்கு எதிர்வினையாற்றிவருகின்றனர். அதே நேரம் எதிர்கட்சிகலாய் சேந்த ஆதரவாளர்கள் அதனை மீம்ஸ் கண்டனாக மாறி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அதாவது நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்று முதல் வீட்டின் தலைவரான சாத்திகாவிடம் விஜய் சேதுபதி இவ்வாறு பேசியிருந்தார்.அதாவது, "லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை." என்று தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துகள் தற்கால அரசியல் நிகழ்வுகளுடனும், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புடையது என்று கூறி சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக விஜய் சேதுபதி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு தற்போது விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதாவது;

''பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் வழக்கமான வடிவம், தீம் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், கருத்துகள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும். அவை நிகழ்ச்சிக்கு உட்பட்ட சூழலிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்படும் எந்தவொரு வெளிப்பாடோ அல்லது கருத்தோ, நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு தனிநபரையோ, அமைப்பையோ, நிறுவனத்தையோ, கருத்தியலையோ அல்லது சூழ்நிலையையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, ஆதரிப்பதாகவோ அல்லது விமர்சிப்பதாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்தைத் தாண்டி, வேறு எந்த வகையிலும் செய்யப்படும் விளக்கங்களோ அல்லது ஒப்பீடுகளோ நிகழ்ச்சிக் குழுவினரால் நோக்கம் கொள்ளப்பட்டதும் அல்ல; ஆதரிக்கப்படுவதும் இல்லை.'' என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay TV has issued a clarification regarding Vijay Sethupathis remarks on the Bigg Boss show


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->