கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை நிலவரம் என்ன ..? மருத்துவமனை விளக்கம்..! - Seithipunal
Seithipunal


கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது  குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருந்தாவது;

''வி.எஸ்.பாபுவின் உடல்நிலையை பல்துறை நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது மருத்துவ அளவீடுகள், உடல்நிலை சீராக உள்ளது.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''வி.எஸ்.பாபு எம்எல்ஏ உடல்நிலை சீராக உள்ளது.'' என்று தெரிவித்தார்.

ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு கடந்த 09-ஆம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hospital issues statement on the health condition of Kolathur MLA VS Babu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->