சஞ்சு சாம்சன் அதிரடி; ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி..! - Seithipunal
Seithipunal


ஆப்கன் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த 03 போட்டிகளுமே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று 02வது போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான இப்ராகிம் சத்ரான் 37 ரன்க்ள எடுத்தார்.

தர்விஷ் ரசூலி 26 ரன்களும், முகமது நபி 20 ரன்களும், ரஷித் கான் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்ப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 03 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 04 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் அரைச்சதம் கடந்து 22 பந்துகளில் 04 சிக்சர் 07 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 38 ரன்களும், திலக் வர்மா 15 ரன்களும் சேர்க்க இந்திய அணி 14.5 ஓவர்களில் 03 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Team India clinches T20 series against Afghanistan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->