விஜய் சேதுபதியின் 'பத்தா' பட டீசர் வெளியீடு..! வித்தியாசமான தோற்றத்தால் இணையத்தை அதிரவிடும் மக்கள் செல்வன்...! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தை ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கியுள்ளார்.சினி ஒன் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.‘பத்தா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், படக்குழுவினர் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஆச்சரியங்களை அளித்து வரும் நிலையில், ‘பத்தா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் மற்றும் கதைக்களத்தின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள டீசர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi Patha teaser released popular celebrity shaking internet his unique look


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->