வேலைக்குப் போகாமல் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி, படிப்பு; மாதாந்தம் அரசு சம்பளமாக ரூ.70 ஆயிரம் பெற்ற MLA மருமகள்..!
Daughter in law of a Karnataka MLA received a monthly government salary of rs70 000 without ever going to work
கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உமேஷ் மேட்டி. இவரது மருமகள், டாக்டர் அங்கிதா யார்கல். இவருடைய தந்தை ராஜ்குமார் யார்கல் மாவட்ட சுகாதார அதிகாரியாக உள்ளார்.
டாக்டர் அங்கிதா யார்கல், பாகல்கோட்டில் உள்ள அரசின் 'நம்ம கிளினிக்' (Namma Clinic) மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியதால் அவர் மாதம் ரூ.75,000 வரை சம்பளமும் பெற்று வந்துள்ளார். இதற்கிடையே, தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி (Pathology) படிப்பையும் படித்து வந்துள்ளார்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, டாக்டர் அங்கிதா யார்கல் அரசுப் பணியை ராஜினாமா செய்யாமலும், உரிய அனுமதி பெறாமலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி படிப்பை முழுநேரமாகப் படித்து வந்ததும், மேலும் பல மாதங்களாக மருத்துவமனைக்குச் செல்லாமல் தொடர்ந்து சம்பளம் பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அங்கிதா யார்கல் ஒப்பந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Daughter in law of a Karnataka MLA received a monthly government salary of rs70 000 without ever going to work