டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் வேலைக்கு நிரந்தர ஆப்பு; டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..!
Tasmac administration announces permanent dismissal for selling liquor at higher prices in Tasmac shops
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது 03வது முறையாக விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கை குறித்து திருத்திய வழிகாட்டுதல்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு பணியாளர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும், 02-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை கண்டறியப்பட்டால் 03 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அடுத்து 03-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குறித்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 0 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tasmac administration announces permanent dismissal for selling liquor at higher prices in Tasmac shops