'விதிகளின்படி அவுட் என்றால் அது அவுட் தான்; இங்கே யாரும் தர்மம் செய்ய வரவில்லை'; சர்ச்சைக்குரிய ரன்அவுட் குறித்து லிட்டன் தாஸ் கருத்து..!
No one here has come to do charity Litton Das comments on the controversial run out
பாகிஸ்தான் அணி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்காக வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணியை, முதல் போட்டியில் வங்கதேசம் எளிதாக வீழ்த்தி, வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 02-வது போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியில், பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா ரன் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, வங்கதேச வீரர் மிராஸ் ஓவரில் ரிஸ்வான் பந்தை தடுத்து ஆடுவார். அப்போது மிராஸை நோக்கி பந்து வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த சல்மான் ஆகாவும் மிராஸும் மோதிக் கொள்வது போன்ற நிலை உருவானது.

இதனால் சல்மான் ஆகாவும், மிராஸும் கிரீஸ்க்கு வெளியில் அப்படியே நின்று விடுவார்கள். அந்த நேரத்தில், சல்மான் ஆகா பந்தை எடுத்து மிராஸிடம் கொடுப்பதற்காக கீழே குனிந்து பந்தை எடுக்க முயலுவார். அதற்குள் மிராஸ் பந்தை எடுத்து ரன்அவுட் செய்துவிடுவார். இதனால், சல்மான் ஆகா கோபத்துடன் வெளியேறுவார். இதனையடுத்து இந்த ரன்அவுட் பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதாவது, இது விளையாட்டுத் தர்மத்திற்கு மாறானது என பலரும் இணையத்தில் விமர்சித்த வந்தனர். இதற்கு 'யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை' என வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் கூறியுள்ளார்.
அதாவது, இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
''முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள், யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை. இது ஒரு சர்வதேசப் போட்டி. அந்த ஆட்டமிழப்பு கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது என்பதால், எந்தக் கோணத்திலும் விளையாட்டுத் தர்மம் மீறப்பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு வீரராக, விதிகளின்படி அவுட் என்றால் அது அவுட் தான் என்பதில் நாங்கள் உறுதியாக உறுதியாக இருக்கிறோம்.'' என ஆவேசமாக கூறியுள்ளார்.
English Summary
No one here has come to do charity Litton Das comments on the controversial run out