பழிக்குப்பழி... ஜாமினில் வெளிவந்த பிரபல ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்; சிசிடிவி கேமராவில் பதிவான கொடூர காட்சிகள்..!
Gang Hacks Notorious Goon Out on Bail to Death with Machetes in Kerala
கேரளாவில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை காரை வழிமறித்து, பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் பழிக்குப் பழியாக அந்த ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொல்லும் கொடூர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அலுவா அதுல். கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என ரவுடியிசம் செய்து அச்சுறுத்தி வந்தவர். பிரபல ரவுடி கும்பலின் தலைவனான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மார்ச் 2025ஆம் ஆண்டு தனது எதிரியான ஜிம் சந்தோஷ் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். குறித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு வழக்கம் போல காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, அலுவா அதுல் காரில் புறப்பட்டுள்ளார்.

அப்போது, மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், கருநாகப்பள்ளி பெட்ரோல் பங்க் எதிரே அதுலின் காரில் மோதி, சாலை நடுவே உள்ள பள்ளத்தில் தள்ளியுள்ளனர். அத்துடன், காரில் இருந்து பட்டாக்கத்தியுடன் கீழிறங்கி அதுலை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தனியாக சிக்கிய அதுலை 04 பேர் கொண்ட கும்பல் துண்டு துண்டமாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொடூர கொலையைக் கண்டு, சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் கொடூரக் காட்சிகள் பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதுலால் கொலை செய்யப்பட்ட ஜிம் சந்தோஷின் கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. அவரை காவல் நிலையத்தில் இருந்துபின் தொடர்ந்து வந்து, திட்டமிட்டபடி பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Gang Hacks Notorious Goon Out on Bail to Death with Machetes in Kerala