நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வரும் போது ஆசனவாயில் கஞ்சா, போதை பவுடர் கடத்தி வந்த புழல் சிறைக்கைதிகளிடம் விசாரணை..! - Seithipunal
Seithipunal


வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு புழல் சிறைக்கு கொண்டுவரும் போது கைதிகளின் ஆசனவாயில் கஞ்சா, பேதை பவுடர் கடத்தி வந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்களத்தூரை சேர்ந்த புவனேஸ் (26), முடிச்சூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்குமார் (26), விஜய் (20) ஆகியோர் கடந்த 10-ஆம் தேதி முதல் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் பகுதி சேர்ந்த ஆகாஷ் (20), சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோரை சிறைக்காவலர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் 20 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பவுடர்கள், 06 பீடி, ஒரு லைட்டர் போன்றவை வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அதனை புவனேஷ், சரண்குமார், விஜய் ஆகியோர் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரிடம் போலீசார் அதிகாரிகள் விசாரணை நடத்தியில் ''நீதிமன்றத்தில் இருந்து வரும் போது ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்தோம்'' என கூறி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சிறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேவேளை பல்வேறு குற்றங்களுக்காக சென்னை புழல் விசாரணை சிறையில் 3500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Inquiry conducted with Puzhal prison inmates who smuggled cannabis and narcotic powder in their anuses while returning from court


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->