வெறுப்பு அரசியல் நிறுத்தப்பட வேண்டும்... 28 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெற்றி இலக்கு - மாணிக்கம் தாக்கூர் அறைகூவல்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வெறுப்பு அரசியல் எந்த வடிவிலும் நிறுத்தப்பட வேண்டும்.  ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்க நாம் செய்யும் தியாகங்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வெறும் யார் எம்.எல்.ஏ., யார் அமைச்சர் என்பதைக் தீர்மானிப்பதற்காக மட்டுமல்ல. வெறுப்பையும் பிளவையும் நம்பும் அரசியல் சக்திகள் ஆட்சிப் பதவிகளில் அமர அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாகும்.

எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பிற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்பிக்கையின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர் கேசி.  அவர்களுக்கும், ஏஐசிசி பொறுப்பாளர் எனது சகோதரர் அவர்களுக்கும் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 

நாம் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன்.

மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 28 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனுப்புவது எங்கள் தெளிவான இலக்காகும்.

ஒன்றிணைந்து, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அனைவர் இணைந்த அரசியலை வலுப்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress mp manikkam tn election 2026


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->