முதல்வர் விஜய் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!ஆடியோ லாஞ்சுக்கு விஜய் வருவாரா?
Release date announced for Sigma directed by Jason Sanjay Will Vijay attend the audio launch
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
முதலில் ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாகியதால், ‘சிக்மா’ படத்தின் வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் சூழலில், ‘சிக்மா’ செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகிறது.
ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ‘சிக்மா’ தள்ளிப்போனது. தற்போது அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருப்பதால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்கள் படத்திற்கான புரமோஷன் பணிகளை மேற்கொள்ள படக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைத்துள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதால், ‘சிக்மா’ மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ‘சிக்மா’ இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வருவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ‘சிக்மா’ படத்திற்குப் பிறகு ஜேசன் சஞ்சய் தனது அடுத்த படத்தை இயக்குவாரா அல்லது கதாநாயகனாக நடிப்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்த ஆண்டு பல புதுமுக நடிகர்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமானால் அதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.தற்போதைக்கு, அக்டோபர் 2 – ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரையரங்க வருகை என்பதே அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
English Summary
Release date announced for Sigma directed by Jason Sanjay Will Vijay attend the audio launch