தமிழர்கள் சுட்டுக்கொ*லை விவகாரம்: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
The shooting death of Tamils Better to mind your own business DK Shivakumar takes a dig at Vijay what actually happened
கர்நாடகாவில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட கண்டனத்திற்கு, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை தரப்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பிலும் வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உரிமம் இல்லாத துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் மான் வேட்டைக்கு சென்றதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காணாமல் போன இரண்டு பசுமாடுகளைத் தேடுவதற்காக விவசாயிகள் வனப்பகுதிக்குச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் விஜய், கர்நாடக வனத்துறை அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்றும், இது படுகொலை என்றும் கூறியிருந்தார்.
மேலும், சம்பவம் குறித்து நேர்மையான மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததுடன், “கர்நாடகாவின் உள்நாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஏன் தலையிட வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் டி.கே. சிவகுமார், விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக பதிலளித்துள்ளார்.
“எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. நான் தமிழக விவகாரத்தில் தலையிடவில்லை. எங்கள் மாநிலத்தை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். முதல்வர் விஜய்யின் கருத்துக்கு நான் பதிலளிக்க மாட்டேன். தமிழகத் தலைவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு–கர்நாடகா இடையே நீடித்து வரும் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில், விஜய்–சிவகுமார் இடையிலான இந்த வார்த்தைப் போர் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The shooting death of Tamils Better to mind your own business DK Shivakumar takes a dig at Vijay what actually happened