சென்னை அயனவரத்தில் அதிர்ச்சி; பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; போக்சோவில் அதிரடி கைது..!
Father arrested under POCSO Act in Chennais Ayanavaram for sexually abusing his own daughter
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு திருமணமாகி 02 மகள்கள் உள்ளனர். கடந்த 06-ஆம் தேதி அன்று தனது மூத்த மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது தனது இரண்டாவது மகளான 09 வது படிக்கும் 16 வயது சிறுமி தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென தந்தை மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார்.
கடாயில் இருந்து வீட்டுக்கு வந்த தாயிடம் இதுபற்றி தெரிவித்தையடுத்து அவர், உடனடியாக அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது சிறுமியின் தந்தை 'தனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று போலீசார் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அவர் குடிபோதைக்கு மாத்திரைகள் எடுத்து வருவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியா நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியா போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Father arrested under POCSO Act in Chennais Ayanavaram for sexually abusing his own daughter