போதை பழக்கத்தால் முடிவுக்கு வந்த வாழ்க்கை; பிரபல ஹாலிவுட் நடிகை திடீர் மரணம்..! - Seithipunal
Seithipunal


பிரபல ஹாலிவுட் நடிகையான டேவி சேஸ் தனது 35 வயதில்  உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டில் வெளியான 'தி ரிங்' திரைப்படத்தில் 'சாமாரா' என்ற பேய் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் கவனத்தை ஈர்த்தவர்.

'டோனி டார்கோ', 'பிக் லவ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவரது மறைவு ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு பைக் விபத்தில் இவருக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட தொடர் சிகிச்சை மற்றும் வலி நிவாரணிகள், அவரை காலப்போக்கில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது. இதனால், அவரது வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து, ஒரு கட்டத்தில் அவர் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதாவது, தவறான நபர்களின் நட்பால் போதைக்கு அடிமையாகியுள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக லாஸ் ஏஞ்சலஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  கடந்த 16-ஆம் தேதி அன்று மூளைக்காய்ச்சல் மற்றும் ரத்தத் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி டேவி சேஸ் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது தாய் கேதி சேஸ் தெரிவித்துள்ளதாவது;
'என் மகளின் இறப்புச் செய்தி கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று வெடிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. போதைப்பொருள் பழக்கத்தால் அவள் தனது சுயநினைவை முழுவதுமாக இழந்திருந்தாள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவளைத் தேடி பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள் பட்டியலை நான் பலமுறை வேதனையுடன் பார்த்துள்ளேன் என்றும், இறுதியில் மருத்துவமனையில் கண்ணாடியின் வழியாக அவளைத் தொட்டு பிரார்த்தனை செய்தேன்  என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

famous Hollywood actress Daveigh Chase dies suddenly


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->