பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவு; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
Prime Minister Modi conveys condolences to the families of those who died in the ammonia gas leak near Periyapalayam
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு 07 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேருக்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் உரிழந்த கநபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையம், மாறுதல்களையும் கூட்டியுள்ளதோடு, தலா 02 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

ஏனைய அரசியல் கட்சி தலைவர்களும் இறங்கல்களையும் தெரிவித்துஉள்ளனர். அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;
"தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi conveys condolences to the families of those who died in the ammonia gas leak near Periyapalayam