'ரோலெக்ஸ்' படம் எப்போது? முதல் முறையாக ரோலெக்ஸ் படம் பற்றி மனம் திறந்த சூர்யா! சொன்ன பதில் இதுதான்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU)-ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் ஒன்று 'ரோலெக்ஸ்'. விக்ரம் படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய சூர்யாவின் 'ரோலெக்ஸ்' கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட தனி படம் எப்போது உருவாகும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில், 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா'வுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சூர்யா, 'ரோலெக்ஸ்' படம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், "ரோலெக்ஸ் படம் குறித்து என்னைவிட லோகேஷ் கனகராஜுக்குத்தான் தெளிவாக தெரியும். அவர் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சரியான நேரம் வரும்போது அந்த படம் நிச்சயமாக உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இப்போது அவர் அல்லு அர்ஜுனுடன் புதிய படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன்பிறகு 'விக்ரம் 2' படமும் உள்ளது. ரோலெக்ஸ் படத்தின் திரைக்கதை பணிகள் நடந்து வருவதாக அவர் பேட்டிகளில் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது. அந்த நேரம் வரும்போது ரோலெக்ஸ் படமும் நடக்கும்" என்றும் சூர்யா கூறியுள்ளார்.

இதன் மூலம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'ரோலெக்ஸ்' திரைப்படம் உடனடியாக தொடங்கும் வாய்ப்பு இல்லை என்றும், லோகேஷ் கனகராஜ் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகே அந்த திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்பதும் தெளிவாகியுள்ளது.

இதற்கிடையில், சூர்யா தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கிறார். மாமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி' ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படம் வெளியாகும் முன்பே சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால், சூர்யாவின் திரைப்பயணத்தில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When is the Rolex movie coming out Suriya opens up about the Rolex film for the first time here is what he said


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->