₹130 கோடி நிலத்தை விற்று போலீசுக்கு லஞ்சம்.... தொழிலதிபர் வீரமணி வழக்கில் பரபரப்புத் தகவல்கள்! - Seithipunal
Seithipunal


தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் (FIR) அவரது பெயரைச் சேர்க்காமல் தவிர்ப்பதற்காக ரூ.70 கோடி வரை லஞ்சமாகச் செலவழிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ளத் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வழக்கின் பின்னணியில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க இடைத்தரகர்கள் பலர், வீரமணியை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாயைப் பணமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செட்டில்மென்ட் தொகையைத் திரட்டுவதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் உதகை (ஊட்டி) ஆகிய உயர் மதிப்புமிக்க பகுதிகளில் அமைந்திருந்த, சந்தை மதிப்பில் சுமார் ரூ.130 கோடி பெறக்கூடியத் தனது நிலங்களை, அவசர அவசரமாக வெறும் ரூ.70 கோடிக்கு வீரமணி விற்பனை செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட கோடிக்கணக்கான தொகையானது, காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் புள்ளிகள் வரை பலருக்கும் கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பிரம்மாண்டப் பணப் பரிவர்த்தனையை ஒருங்கிணைத்து, பல்வேறு நபர்களுக்கும் பணத்தைப் பகிர்ந்தளிக்கும் முக்கிய முகவராகச் சென்னையைச் சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகன் செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் இடைத்தரகராகச் செயல்பட்ட அந்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனைக் கைது செய்யக் காவல் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பின்னணி வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தமிழக அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

130 Crore Property Sold for 70 Crore Settlement: Explosive Allegations in Gem Veeramani Case


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->