சுதந்திர தின பாக்ஸ் ஆபீஸ் ரேஸ்! சூர்யாவுடன் மோத ரெடியான விஷால்! நேருக்கு நேர் மோதல்!‘மகுடம்’ சூடப் போவது யாரு?
Independence Day Box Office Race Vishal ready to clash with Suriya A head to head battle Who will wear the crown
தமிழ் சினிமாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவவுள்ளது. சூர்யா, விஷால், கவின் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வாரம் மாதவன் நடித்த 'ஜி.டி. நாயுடு' மற்றும் லோகேஷ் கனகராஜின் 'டிசி' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் படங்களின் மீதே தற்போது கவனம் திரும்பியுள்ளது.
சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.
அதேநேரத்தில், நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள 'மகுடம்' திரைப்படமும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் அதிரடி டிரைலர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகும் என்றும் விஷால் அறிவித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷால், இரும்புத்திரை, மார்க் ஆண்டனி, மதகஜ ராஜா உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். தற்போது அவர் இயக்குநராக களமிறங்கியுள்ள 'மகுடம்' திரைப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இதனால் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'மகுடம்', 'ஹாய்' ஆகிய மூன்று படங்களும் நேரடியாக பாக்ஸ் ஆபீஸில் மோதவுள்ளன. சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இந்த படங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வசூலில் யார் முன்னிலை பெறுவார்கள் என்பது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Independence Day Box Office Race Vishal ready to clash with Suriya A head to head battle Who will wear the crown