ஒரே நேரத்தில் இரண்டு மெகா படங்கள் ஓவர்...! கார்த்தியின் ‘சர்தார் 2’ மற்றும் ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு...! - அடுத்த பிளான் என்ன...? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாகவும், கிளாஸ் நடிகராகவும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியுள்ள நடிகர் கார்த்தி, தற்போது பிரம்மாண்டமான பட வரிசையால் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். அடுத்தடுத்த மெகா திட்டங்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கார்த்தியின் வரவிருக்கும் திரைப்பட பட்டியல் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கதைத்தேர்வில் அபார நுணுக்கம் காட்டி வரும் கார்த்தி, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் பலமான கதைக்களங்கள் மூலம் தொடர்ந்து வெற்றியை வசப்படுத்தி வருகிறார். மாஸ், ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என அனைத்து ஜானர்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் கனவு திட்டங்களில் இணைந்து பிஸியாக உள்ளார்.

அந்த வகையில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இரட்டை வேடங்களில் கார்த்தி மீண்டும் மிரட்டவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து, கார்த்தியின் மற்றொரு பிரம்மாண்ட படைப்பான ‘மார்ஷல்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதேவேளை, இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கார்த்தியின் 30-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவாகும் இந்த திரைப்படம், கார்த்தியின் மார்க்கெட்டை பான்-இந்தியா அளவுக்கு மேலும் விரிவுபடுத்தும் என திரை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.மேலும், ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுமட்டுமல்லாமல், ரசிகர்களின் உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தும் வகையில் கார்த்தியின் மெகா ஹிட் திரைப்படங்களின் தொடர்ச்சிகளும் அணிவகுத்து நிற்கின்றன. லோகேஷ் கனகராஜின் ‘கைதி 2’, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ‘தீரன் 2’, அதிரடி கூட்டணியில் உருவாகவுள்ள ‘ஹிட் 4’ மற்றும் ‘மார்ஷல் 2’ ஆகிய திரைப்படங்களும் கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்களாக பேசப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலாக, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சுந்தர் சி, பாண்டிராஜ், மாரி செல்வராஜ், போயபட்டி ஸ்ரீனு, விவேக் ஆத்ரேயா மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோருடனும் கார்த்தி முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத்  தொடர்ச்சியாக பிரம்மாண்ட இயக்குநர்கள், வித்தியாசமான கதைக்களங்கள், மெகா சீக்வல்கள் மற்றும் பான்-இந்தியா முயற்சிகள் என கார்த்தியின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. வரும் ஆண்டுகள் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் ஆதிக்கம் மேலும் வலுப்பெறும் என திரையுலகினர் உறுதியாக கணித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two mega films over same time Karthi Sardar 2 and Marshal shooting completed What next plan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->