காசோலை மோசடி வழக்கு; நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும்; சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்..! - Seithipunal
Seithipunal


நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாருக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில், அவரை செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடன்களை அடைப்பதற்காக, சென்னையை சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 02 கோடி ரூபாய் கடன் நடிகர் சரத்குமார் பெற்றுள்ளார். அப்போது கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் அவர் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துள்ளது.

இதையடுத்து, நடிகர் சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை மோசடி வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகர் சரத்குமாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Sarathkumar summoned by Saidapet court to appear in person in cheque fraud case


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->