ஓடிடி தளத்தில் 'துரந்தர்' மெகா சாதனை; 2026-இல் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம்; நெட்பிளிக்ஸ் CEO..!
Netflix CEO says Durandhar is the most watched non English film on OTT platform in 2026
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்பட பலர் நடித்து வெற்றிபெற்ற படம், ‘துரந்தர்’. இந்த படத்தை ஆதித்யா தார் இயக்கி இருந்தார். படத்தின் 02-ஆம் பாகம், ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தியில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளி இடப்பட்டது.
பாகம் ஒன்று, பாகம் இரண்டு படங்களுமே மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதிலும், 02-ஆம் பாகமான ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’, இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்த முதல் பாலிவுட் படம் என்ற புதிய சாதனையை படைத்தது. துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து உலகளவில் ரூ.3,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி வசூலை வேட்டை நடத்திய இந்த படம் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை, ‘துரந்தர்’ படம் 3.7 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
அத்துடன், நெட்பிளிக்ஸின் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான பட்டியலில், 22 நாடுகளில் இப்படம் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதை அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரெட் சரண்டோஸ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், நெட்பிளிக்ஸில், இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான சர்வதேச அளவிலான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் சரண்டோஸ் கூறியுள்ளார்.
அதன்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வாரமும் உலகளாவிய டாப் 10 பட்டியலில் குறைந்தபட்சம் ஓர் இந்தியத் திரைப்படம் அல்லது தொடர் இடம்பெற்று வருகிறதாகவும் கூறியுள்ளார். அதாவது, இந்திய சினிமா தற்போது சர்வதேச பொழுதுபோக்கு சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்திருப்பதற்கு ‘துரந்தர்’ வெற்றி முக்கியமான உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Netflix CEO says Durandhar is the most watched non English film on OTT platform in 2026