'குற்றவாளிக்கு மட்டும் திடீர் நெஞ்சுவலியா... என்னய்யா டிராமா இது'...? - நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி...! - Seithipunal
Seithipunal


பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் திடீரென நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ப்பதாவது,"பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்ததாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அப்படியிருக்க, இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படும் நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது எப்படி? மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகளாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்தும் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு, காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, அன்வர்தீனின் மரணத்தை இயற்கையான மரணம் என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது என்றும், மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்வர்தீன் உயிரிழந்த நேரத்தில் பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இந்த மரணத்தின் உண்மையான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்த முதல்-அமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவரது பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did the culprit just have sudden heart attack What kind of drama is this Nayinar Nagendran barrage questions


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->