பள்ளி வாகன ஓட்டுநரின் கொடூர முகம்...! - வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் அக்கிரமம்...  அதிரடி கைது செய்த தூத்துக்குடி காவலர்கள்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை, அந்தப் பெண்ணே துணிச்சலுடன் எதிர்கொண்டு பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் குமார், 23. இவர் கயத்தாறில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், சம்பவத்தன்று மாலை 35 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது குமார் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.எதிர்பாராத வகையில் வீட்டுக்குள் நுழைந்த நபரின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரை துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, அந்த நபரை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொண்டதுடன், அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளார்.இதையடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்த பெண், கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலர்களிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.விசாரணையில், பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் குமாரை காவலர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை அந்தப் பெண்ணே துணிச்சலுடன் எதிர்கொண்டு காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruel face school bus driver Thoothukudi police arrested woman who entered house and committed atrocities


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->