என்.எல்.சி போராட்டம் எதிரொலி.. கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடல்.!
PMK protest against NLC tasmac closed in kallakurichi
நெய்வேலியில் என்எல்சி-யில் பாமகவினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி, அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாலை 6 முதல் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
PMK protest against NLC tasmac closed in kallakurichi