கூடுதல் அதிகாரத்துடன் ராணுவ தளபதி...! போர் முனைப்பில் இந்தியா...!
Army Chief with additional powers India on verge war
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலை முப்படைகள் அறவே முறியடித்து வருகின்றனர். இருந்தாலும், எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில்,இந்தியாவின் ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பகுதிநேர தன்னார்வலர்கள் கொண்ட படையையும், இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழி நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இந்திய ராணுவம் மேலும் வலுவடையும் என்று கணிக்கப்படுகிறது.
English Summary
Army Chief with additional powers India on verge war