இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை..? சமூகவலைத்தளத்தில் வைரலாக பதிவு..! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை எஸ்தர் நோரோன்ஹா தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் நல்ல செய்தியைப் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது 02-வது திருமணத்தைப் பற்றியதாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர்.

எஸ்தர் நோரோன்ஹா தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் 'மீன் குழம்பும் மண் பானையும்', 'கேம் ஆப் லோன்ஸ்', 'வெட்டு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல பாடகர் நோயலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த ஜோடி விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு என்  'புதிய அறிவிப்பு' என்ற குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், 'கடவுள் என் வாழ்க்கையில் இன்னொரு அழகான ஆண்டை எனக்குக் கொடுத்திருக்கிறார். எனக்கு அற்புதங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியதற்காக இதயத்தின் ஆழத்திலிருந்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என் பிறந்தநாளில் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் நன்றி . உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு 'புதிய அறிவிப்பு' உள்ளது அதை விரைவில் அறிவிப்பேன், காத்திருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.  இது எஸ்தர் நோரோன்ஹாவின் 02-வது திருமணம் பற்றியதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actress Esther Noronha preparing for second marriage


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->