திரையுலகில் சோகம்...! பிரபல மலையாள முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஹரிமுரளி காலமானார்...! - Seithipunal
Seithipunal


மலையாளத் திரையுலகில் பிரபலமான முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஹரிமுரளி (27), கேரளாவின் பையனூரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 'ரசிகன்', 'அண்ணன் தம்பி', 'மாடம்பி' போன்ற படங்களில் திலீப் மற்றும் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

நடிப்பைத் தாண்டி திரையுலகில் சிறந்த VFX கலைஞராகவும் பணியாற்றி வந்த ஹரிமுரளி, 'பட்டணத்தில் பூதம்', 'அமர் அக்பர் ஆண்டனி' போன்ற படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது உயிரிழந்த அவரது உடல் பையனூர் பேபி மெமோரியல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 27 வயதிலேயே இந்தத் திறமையான இளம் கலைஞரின் மறைவு மலையாளத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Film Industry Renowned Former Malayalam Child Star Harimurali Passes Away


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->