பெண்ணின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி அட்டூழியம்... ரவுடியை கைது செய்த காவலர்கள்...!
Atrocities committed by grabbing woman by neck and pushing her down police arrested rowdy
சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் ரவுடியை காவலர்கள் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ், நேற்று முன்தினம் மாலை பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சென்ற போதை ஆசாமி ஒருவர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர், பெண்ணின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அண்ணாசாலை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இந்த விசாரணையின் அடிப்படையில், சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியை சேர்ந்த சதீஷ், 36, என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடியாக செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சதீஷை காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Atrocities committed by grabbing woman by neck and pushing her down police arrested rowdy