3 தமிழர்களின் மரணம்... 'உண்மை வெளிவர வேண்டும்' - சட்டப்பேரவையில் உதயநிதி பரபரப்பு பேச்சு...! - Seithipunal
Seithipunal


கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, சம்பவத்தின் உண்மை பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர உயர்நிலை நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன்வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.உயிரிழந்த 3 தமிழர்களின் உடற்கூராய்வு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், அவர்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எனவே, இந்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிந்து, முழுமையான விசாரணை நடத்த உயர்நிலை நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில முதல்-மந்திரியிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதா என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களையும் தமிழ்நாடு அரசு கைவிடாமல் முழுமையாக துணை நிற்க வேண்டும். திடீரென குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன், போதுமான நிதியுதவியும் வழங்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death 3 Tamils The truth must come out Udhayanidhi sensational speech Legislative Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->