காதல் திருமணம் செய்து 2 மாதமே ஆன புதுப்பெண்... சாலையோர லாரி மீது கார் மோதி பலி...!
newlywed couple who married just 2 months killed when car hit lorry roadside
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், காதல் திருமணம் செய்து 2 மாதங்களே ஆன புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்தவர் நவீன், 23. இவர் அதே பகுதியை சேர்ந்த சத்யா, 19, என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதி சென்னையில் வசித்து வந்தனர்.இந்த நிலையில், புதுமண தம்பதியை பெற்றோர் சமரசமாக பேசி சொந்த ஊருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நவீனும் சத்யாவும் நேற்று அதிகாலை காரில் கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டனர்.அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே சென்னசமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.
காரில் பயணம் செய்த சத்யா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சத்யாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து 2 மாதங்களே ஆன நிலையில், பெற்றோருடன் சமரசமாக சொந்த ஊருக்கு புறப்பட்ட புதுமண தம்பதிக்கு நேர்ந்த இந்த விபரீதம் இரு குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
newlywed couple who married just 2 months killed when car hit lorry roadside