குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய்ப்பால் சாதம்...! - சத்துகள் நிறைந்த சூப்பர் உணவு...!
Coconut Milk Rice Aids Children Growth Nutrient Rich Superfood
தமிழர் பாரம்பரிய உணவுகளில் புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போலவே தேங்காய் சாதமும் தனி இடம் பெற்றது. சுவை மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளையும் தரும் ஒரு ஆரோக்கியமான உணவாக இது விளங்குகிறது. குறிப்பாக தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் சாதம், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறந்த சத்துணவாக இருக்கும்.

பொதுவாக சாத வகைகள் செய்யும் போது சுவை அதிகமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். ஆனால் தேங்காய்ப்பால், காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் இந்த சாதம் சுவையோடு ஆரோக்கியத்தையும் தரும் முழுமையான உணவாக மாறுகிறது.
தேங்காய்ப்பாலில் வைட்டமின் C, போலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள MCT (நல்ல கொழுப்பு) உடனடியாக உடலுக்கு சக்தியை அளிக்கிறது.
இந்த கொழுப்பு மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.பசும்பாலுக்கு ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மாற்று ஆகும். இதில் உள்ள லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
அதேபோல் கால்சியம் மற்றும் வைட்டமின் D எலும்புகளின் வளர்ச்சியை வலுப்படுத்துகின்றன.மேலும் தேங்காய்ப்பாலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் உடலின் செல்களை பாதுகாக்க உதவுவதுடன், அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலில் நீர் சமநிலையையும் பராமரிக்கிறது.
சுவையும் ஆரோக்கியமும் ஒன்றாக சேரும் உணவாக தேங்காய்ப்பால் சாதம் சிறந்த தேர்வாகும்.
English Summary
Coconut Milk Rice Aids Children Growth Nutrient Rich Superfood