மொஜ்தபா கமெனிக்கு கடும் எச்சரிக்கை...! 'உயிருக்கு பாதுகாப்பு இல்லை'...! -நெதன்யாகு - Seithipunal
Seithipunal


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமெனி புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் பதவி ஏற்றதிலிருந்து அவர் பொதுமக்கள் முன் தோன்றாததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அமெரிக்க தாக்குதலில் அவர் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார் என்ற தகவல்களும் பரவின.

இந்த நிலையில் மொஜ்தபா கமெனி முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பழிவாங்குவோம்; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், “மொஜ்தபா கமெனி காயமடைந்திருக்கலாம்; ஆனால் அவர் உயிருடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். அதேவேளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “மொஜ்தபா கமெனியின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என கடும் எச்சரிக்கை விடுத்தார்.

போரின் 14-வது நாளாக தொடரும் நிலையில், ஈரான் தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பல நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சவுதி அரேபியா 12 டிரோன்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 10 ஏவுகணைகள் மற்றும் 26 டிரோன்களை இடைமறித்ததாக அறிவித்துள்ளது.

மேலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stern Warning Mojtaba Khamenei No Guarantee for Your Life Netanyahu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->