புற்றுநோய், இதய நோய்களுக்கு எதிரான பாரம்பரிய அரிசி வகையின் நன்மைகள்...! -கருப்பு கவுனி அரிசி - Seithipunal
Seithipunal


ஒருகாலத்தில் அரசர்களின் அரண்மனை உணவாகப் போற்றப்பட்ட கருப்பு கவுனி அரிசி, இன்று அரிதாக காணப்படும் பாரம்பரிய அரிசி வகையாக மாறியுள்ளது. இந்த அரிசி கருப்பு நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம் அதில் அதிகமாக உள்ள அந்தோசையனின் (Anthocyanin) என்ற சக்திவாய்ந்த இயற்கை வேதிப்பொருள்.

சமைத்த பிறகு இந்த அரிசி அழகான ஊதா நிறத்தில் மாறுவது அதன் தனிச்சிறப்பு.வரலாற்று குறிப்புகளின்படி, பண்டைய தமிழ் மன்னர்களும் சீன அரசர்களும் கடல் வழி வாணிபத்தில் ஈடுபட்ட காலத்தில் இந்த அரிய அரிசி வகை தமிழகம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சீன அரசர்களின் அரண்மனையில் வெளிநாட்டு அரசர்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்பட்ட விருந்துகளில் கருப்பு கவுனி அரிசி முக்கிய இடம் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதன் அபாரமான ஊட்டச்சத்து காரணமாக, சீன அரசர்கள் இந்த அரிசியை “இறைவன் அளித்த அரிய வரம்” என்று கருதியதாகவும், பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு ஒருகாலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அரசரின் உத்தரவை மீறி இதை பயன்படுத்தினால் கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.மருத்துவ குணங்களிலும் கருப்பு கவுனி அரிசி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து மற்றும் அந்தோசையனின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.

குறிப்பாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்து போராட உதவுவதோடு, இதய நோய்களைத் தடுக்கும் திறனும் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் இது உதவுகிறது.

குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டதால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்தி இதய ரத்தக் குழாய்களை பாதுகாக்கிறது.இதனால், சுவையும் சத்தும் இணைந்த பாரம்பரிய உணவாக கருப்பு கவுனி அரிசி இன்று மீண்டும் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits Traditional Rice Variety Against Cancer and Heart Disease Black Kavuni Rice


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->