ஆன்லைன் முதலீட்டில் லட்சங்களை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர்...! அடகு கடையில் கைவரிசை காட்ட முயன்று சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


சென்னையில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அவர் மென்பொருள் என்ஜினீயர் என்பதும், இணையவழி முதலீட்டில் ஏற்பட்ட பெரும் இழப்பால் கடனில் சிக்கியதால் திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது.சென்னை திருவான்மியூர் கெனால் சாலை பகுதியில் வசித்து வருபவர் மங்கள்சந்த் (63).

இவர் இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.கடந்த 11-ந்தேதி இரவு, அவரது கடைக்கு அருகில் வசிக்கும் சிலர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். நகை அடகு கடையின் பூட்டை மர்ம நபர் ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் பதற்றத்துடன் கடைக்கு விரைந்து சென்ற மங்கள்சந்த், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களின் உதவியையும் நாடினார். இதையடுத்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.பொதுமக்கள் ஒன்று திரண்டதை பார்த்ததும், கடையின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனால், அவரை பொதுமக்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை திருவான்மியூர் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அந்த நபரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்பது தெரியவந்தது.மென்பொருள் என்ஜினீயரான அவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வேலை காரணமாக பெருங்குடியிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.நல்ல ஊதியத்துடன் வேலை பார்த்து வந்த அவர், எதற்காக நகை அடகு கடையில் திருட முயன்றார் என்பது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் காவலர்களையே அதிர்ச்சியடையச் செய்தது.

தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைப்பதாகவும், இணையவழி முதலீட்டில் அதிகளவில் பணத்தை இழந்ததால் கடனில் சிக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடனை சமாளிக்க வேறு வழியின்றி திருட்டில் ஈடுபட முடிவு செய்ததாகவும், இதன் காரணமாகவே நகை அடகு கடையை குறிவைத்து பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருட முயன்றதாகவும் அவர் காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருட்டில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பதால், அதற்கான அனுபவம் இல்லாமல் சிக்கிக் கொண்டதாகவும் ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு விசாரணையில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

software engineer who lost millions online investments How did he get caught trying show off at pawn shop


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->