தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்...! அதிரடியாகக் குறைந்தது விலை... - இன்றைய நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.15 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 170-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.45 குறைந்து ரூ.14 ஆயிரத்து 125-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news gold buyers Prices have dropped dramatically What situation today


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->