பல்லாயிரம் பேரின் காத்திருப்பை தவறவிட்ட விஜய்!- புதிய தேதியில் சந்திக்க விஜயின் உணர்ச்சி பூர்வ பதிவு!
Vijay missed wait thousands people Vijays emotional post meet new date
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டதாவது,"வாகை சூடும் வரலாறு மீண்டும் எழுகிறது; உங்க விஜய் வருகிறான்" எனும் மக்கள் சந்திப்பு பயணம் நேற்று திருச்சியில் துவங்கியது. அதன்பின் அந்தப் பயணம் அரியலூர், குன்னம் வரையிலும் தன்னம்பிக்கையோடு விரிந்தது.

வழியெங்கும் பேரெழுச்சியோடு காத்திருந்த மக்களின் பேரன்பும் பேராதரவும் என் உள்ளத்தை உருகச் செய்தது. இதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
இத்தனை சிறப்பான நிகழ்வுகள் சாத்தியமானதற்கு ஓய்வெடுக்காமல் உழைத்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
ஆனால் நேற்று ஒரு குறை: நீண்ட தூரம் வரை பெரும் மகா கூட்டம் சாலையோரம் திரண்டதால், பெரம்பலூரில் நள்ளிரவு வரை காத்திருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை சந்திக்க இயலவில்லை. இதனை என் மனம் கனிந்த வருத்தத்துடன் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மக்களின் நலனை கருதி, அந்த தருணத்தில் நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் நிச்சயமாக, இன்னொரு நாளில் பெரம்பலூர் வந்து உங்களை நேரில் சந்திப்பேன். பேரன்போடு காத்திருந்த அனைவருக்கும் என் வணக்கமும் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay missed wait thousands people Vijays emotional post meet new date