ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா? தீவிர பேச்சுவார்த்தை?
Chennai super kings rajasthan royals sanju jadeja
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்டகால வீரருமான சஞ்சு சாம்சன், அடுத்த ஐபிஎல் சீசனுக்கான அணியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சாம்சனுக்கும், அப்போது தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான் அணியில் இருந்து சாம்சன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அவர் எந்த அணிக்குச் செல்வார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்தச் சூழலில், சஞ்சு சாம்சனைத் தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்குப் பதிலாக சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் (Trade) செய்துகொள்வது குறித்து இரு அணிகளும் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு வீரர்களுமே ரூ.18 கோடி மதிப்புள்ள வீரர்கள் ஆவர். இருப்பினும், நேரடி வீரர் பரிமாற்றத்திற்குப் பதிலாக, ஜடேஜாவுடன் சேர்த்து, இளம் வீரரான டெவால்ட் ப்ரேவிஸையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோருவதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் இந்தக் கூடுதல் கோரிக்கையை ஏற்க சிஎஸ்கே அணி தற்போது தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Chennai super kings rajasthan royals sanju jadeja