மோதிரம் சொன்ன ரகசியம்...! - விஜய்-ராஷ்மிகா திருமணம் நெருங்குகிற...? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியாக பேசப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா குறித்து மீண்டும் திருமணக் கிசுகிசுக்கள் தீவிரமாகி வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஐதராபாத்தில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானாலும், காதல் விஷயத்தைப் போலவே இதையும் இருவரும் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

ஆனால் ராஷ்மிகாவின் விரலில் மிளிர்ந்த நிச்சயதார்த்த மோதிரம் அந்த ரகசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.இதற்கிடையில், நடிகர் ஜெகபதி பாபு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், அவரது மோதிரம் குறித்து கேள்வி எழுந்தபோது, “இது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது” என்று கண்ணசைத்து புன்னகையுடன் பதிலளித்தது ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியது.

அதனைத் தொடர்ந்து, இந்த நட்சத்திர ஜோடி பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனாலும் இதுகுறித்து இருவரும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்தனர்.

இந்நிலையில், உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் ஆடம்பர அலங்காரங்களும், திருமணத் தயாரிப்புகளும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள், “இது கனவுக் கல்யாணமா?” என்று உற்சாகமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், எப்போதும் போல இந்த காதல் ஜோடி இன்னும் மௌனமே பதிலாக வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

secret revealed by ring Vijay and Rashmika wedding approaching


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->