விழுப்புரத்தில் சோகம்; பழைய பேனரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப பலி; 4 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் பேனரை அகற்றும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 04 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம், கே.கே. ரோடு, கணபதி நகர் ஜங்ஷன் பகுதியில் இன்று (20.09.2026) காலை 08 மணியளவில், கணபதி நகர் பகுதி இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றி, அதே பகுதியைச் சேர்ந்த கரண் என்ற கதிர்வேல் என்பவரின் மகன் மித்ரனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேனர் வைப்பதற்காக சிலர் முயன்றுள்ளனர்.

பழைய பேனரை அகற்றும் போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் (HT Line) பட்டுள்ளது. அப்போது பேனரை பிடித்துக் கொண்டிருந்த மதன்குமார் (28) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிர்வேல் (30), வஞ்சிநாதன் (21), பூவரசன் (24) மற்றும் கோகுல் (19) ஆகிய 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மதன்குமார், கே.கே. ரோடு, ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் பேனர் ஒட்டுதல் மற்றும் பெயிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த கதிர்வேல் மற்றும் பூவரசன் ஆகியோர் விழுப்புரம் இஎஸ் மருத்துவமனையிலும், வஞ்சிநாதன் விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வஞ்சிநாதன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இரு உள்ளங்கைகளிலும் காயமடைந்த கோகுல் விழுப்புரம் இஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One person died of electrocution and four others were injured while removing an old banner in Villupuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->